ஆம் ! எங்களிடம் உள்ளது
அகழ்வாராய்ச்சி அலகு
அகழ்வுக்கப்பல் - சயுரு (சுரண்டும் துரைவாரி)akku
தகவல்
இவை துறைமுக பராமரிப்புக்காக குறிப்பாக கப்பல்துறைகள் மற்றும் துயிலிடங்கள் போன்ற வரையறுக்கப்பட்ட பகுதிகளின் பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது கடற்பரப்பில் உள்ள வண்டல்களை மெதுவாக பிடித்து இழுத்து அவற்றின் உள்ளடக கங்களை வெளியேற்றுகின்றது. பெரும்பாலும் விரிகுடாவில் உள்ள சேற்றை
அகழ்வதற்கும், களிமண்ணை எடுக்கவும், சேற்றை தளர்த்தவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மீன்பிடி துறைமுகங்களின் தாழ்நிலங்கள் மற்றும் படகுகள் செல்லும் வழிப்பாதைகளில் உள்ள மணலை அகற்ற இந்த அகழ்வாராய்ச்சி இயந்திரங்களை பயன்படுத்துகின்றோம். மிக முக்கியமாக, இக்கப்பல் அகற்றப்பட்ட மணலை தானாகவே ஆழ்கடலுக்கு அனுப்பும். இதன் மூலம் மீனவ மக்கள் தமது அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை எவ்வித தடையுமின்றி செய்ய முடிகிறது.
- உற்பத்தி செய்த வருடம் - 2014
- உற்பத்தி செய்த நாடு - ஜப்பான்
- வகை - சுரண்டும் துரைவாரி
- கப்பலின் பெறுமதி - ரூ. 960Mn
- ஒட்டுமொத்த நீளம் - 49.9 M
- அகலம் - 11.5 M
- கப்பல் அடிநீர் இடைத்தொலைவு - 3.40 M
- மொத்த எடை - 624 T
- மண்ணை கையாளும் திறன் - 300 M2
தற்போது இந்த கப்பல் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இயங்குகிறது. அத்துடன் மற்ற துறைமுகங்களிலும் தேவைகளுக்காக பயன்படுகிறது. மேலும் இது பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் கட்டண அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அகழ்வுக்கப்பல் ருஹுனுபுதா
தகவல்
- உற்பத்தி செய்த வருடம் - 1989
- உற்பத்தி செய்த நாடு - ஜப்பான்
- வகை - சுரண்டும் துரைவாரி
- கப்பலின் பெறுமதி - ரூ. 109.6Mn
- ஒட்டுமொத்த நீளம் - 40.3 M
- அகலம் - 10.0 M
- கப்பல் அடிநீர் இடைத்தொலைவு - 2.8 M
- மொத்த எடை - 361 T
- மண்ணை கையாளும் திறன் - 200 m³
இதன் மூலம் மீனவ மக்களின் அடிப்படைத் தேவையான மீன்பிடித் துறைமுகங்களின் குளங்கள் மற்றும் அணுகு சாலைகளில் மணல் அள்ளப்படுகிறது. மிக முக்கியமாக, அதே கப்பல் மூலம் மணலை மீண்டும் ஆழ்கடலுக்குக் கொண்டு சென்று விடுவார்கள். இதன் மூலம் மீனவ மக்கள் தமது அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி மேற்கொள்ள முடியும்.
இக்கப்பல் தற்போது டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதுடன் ஏனைய துறைமுகங்களில் அகழ்வு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. கப்பல் பழுதுபார்க்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன.
அகழ்வுக்கப்பல் நில்தியவர (வெட்டி உறிஞ்சும் அகழிகள்)
தகவல்
இவ் வெட்டி உறிஞ்சும் அகழிகள் கடினமாக மண்ணை சுழலும் வெட்டும் தலையின் மூலம் துண்டங்களாக மாற்றுகின்றன. வெட்டப்பட்ட துண்டங்கள் தூர்வாரி குழாய்கள் மூலம் உள்ளெடுக்கப்பட்டு கடல் மற்றும் நிலத்தில் குழாய் வழியாக ஒரு நீக்கல் பரப்புக்கு வெளியேற்றப்படுகிறது.
இலங்கை மீன்பிடி துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் இந்த கப்பல்களை மீன்பிடி துறைமுகங்களின் தாழ்நிலத்தில் இருந்து மணல் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுவதற்கு பயன்படுத்துகிறது மற்றும் மீனவ சமூகத்தின் அடிப்படை தேவையாக இருக்கும் தாழ் நிலத்திலிருந்தும் தேவையற்ற மண்ணை அகற்றுகின்றது.
இதன் மூலம் மீனவ மக்கள் தங்கள் அன்றாட மீன்பிடி நடவடிக்கைகளை எவ்வித இடையூறும் இன்றி தொடரமுடியும்.
- உற்பத்தி செய்த வருடம் - 2007
- உற்பத்தி செய்த நாடு - நெதர்லாந்து
- வகை - வெட்டி உறிஞ்சும் அகழி
- கப்பலின் பெறுமதி - ரூ. 110 Mn
- ஒட்டுமொத்த நீளம் - 15.0 M
- அகலம் - 05.0 M
- கப்பல் அடிநீர் இடைத்தொலைவு - கிட்டத்தட்ட 0.50 M
- மொத்த எடை - 15 T
- மண்ணை கையாளும் திறன் - 80 m³/ hr
அகழ்வுக்கப்பல் சலாபுரகிந்தூரி
தகவல்
- உற்பத்தி செய்த வருடம் - 2007
- உற்பத்தி செய்த நாடு - அமெரிக்கா
- வகை - வெட்டி உறிஞ்சும் அகழி
- கப்பலின் பெறுமதி - ரூ. 128 Mn
- ஒட்டுமொத்த நீளம் - 17.5 M
- அகலம் - 03.6 M
- கப்பல் அடிநீர் இடைத்தொலைவு - 4.0 M
- மொத்த எடை - 25 T
- மண்ணை கையாளும் திறன் - 100M3 / hr
இக்கப்பல் கிறிந்த மீன்பிடி துறைமுகத்தின் தேவைக்காக அனுப்பப்பட்டுள்ளது.